உங்கள் பற்கள் மஞ்சளாக உள்ளதா? இதனை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Dental Problem
By Kishanthini
பொதுவாக சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.
அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால் கிருமி தொற்று அதிகமாக காணப்படும்.
அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும். அவற்றை முடிந்தவளவு இயற்கை முறையில் நீக்குவதே சிறந்தது. தற்போது அதனை எப்படி என்பதை பார்ப்போம்.

- படிகாரத்தூளுடன் சம அளவு பேக்கிங் சோடாவை கலந்து பற்களை மென்மையாக தேய்க்கவும். தினமும் செய்ய வேண்டாம். வாரத்தில் இரண்டு முறை இதை செய்து வரவும். பேக்கிங் சோடாவுடன் டூத் பேஸ்ட்டும் சேர்த்து பயன்படுத்தலாம்.
- பற்களை தேய்க்க எலுமிச்சையை பயன்படுத்தலாம். தோலுடன் அல்லது நீர்த்த எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் இது சாதாரண பிஹெச் சமநிலையை மீட்டெடுக்கும் என்று அறியப்படுகிறது. இதை அடிக்கடி பயன்படுத்தலாம்.
-
தேங்காயெண்ணெயில் உள்ள லாரிக் அமிலமானது வீக்கத்தை குறைக்கவும் பாக்டீரியாவை கொல்லவும் உதவுகிறது. தேங்காயெண்ணெயை கொண்டு வாய் கொப்புளித்து வந்தால் இத்தகைய நன்மைகளை பெறலாம்.
- பற்களை வெண்மையாக்கவும், ஈறுகளை வலுப்படுத்தவும், துர்நாற்றத்தை அகற்றவும் செய்கிறது. மேலும் இது பற்களின் இடுக்குகளில் இருக்கும் பாக்டீரியாவை தடுக்கவும் மற்றும் வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. வேப்பங்குச்சி கரடு முரடாக இருக்கும் என்பதால் இதை அப்படியே பயன்படுத்தாமல் தண்ணீரில் நனைத்து பயன்படுத்துவது நல்லது.
- கடுகு எண்ணெயுடன் உலர்ந்த அல்லது ஃப்ரெஷ்ஷான துளசி இலைகளை கலந்து பிறகு இதை பயன்படுத்தலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US