தொண்டை வலி பாடாய் படுத்துதா? எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ
தொண்டை வலி பிரச்சினைக்கு எளிய வீட்டு வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர்பானங்கள், ஐஸ் கிரீம், பழச்சாறு இவற்றினை பருகும் போது பருவநிலை மாற்றத்தினால் சிலருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்படும்.
அதிலும் தொண்டையில் புண் மற்றும் அரிப்பு ஏற்பட்டு உமிழ்நீர் விழுங்குவதில் சிரமம், உணவுவிழுங்குவதில் சிரமம் ஏற்பட்டுவிடுகின்றது.
இதற்கு மருத்துவமனை செல்வதையும், மருந்தகத்தில் மருந்து வாங்கி உட்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கான எளிய வீட்டு வைத்தியமே இதுவாகும்.
தொண்டை வலிக்கு பயன்படும் எளிய வீட்டு வைத்தியங்கள்
துளசி இலையை சாறு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு தொண்டையை மசாஜ் செய்வது தொண்டை அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சிறந்தது.
தேங்காய் எண்ணெயில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் கலந்து தொண்டை அரிப்பு உள்ள இடத்தில் தடவவும். இது உட்புறம் புண் உள்ள தோலை மென்மையாக்குகிறது மற்றும் அரிப்புகளை குறைக்கிறது.
தொண்டை வலி சரியாக துளசி, இஞ்சி, தேன் கலந்து தேநீர் தயாரித்து அருந்தலாம். இதன் மூலம் தொண்டை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
வெல்லத்தை மென்று சாப்பிடுவது தொண்டையில் ஏற்படும் வலி மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எதையும் சாப்பிட்ட பிறகு சிறிது வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
எலுமிச்சை மற்றும் வேப்பிலையை வெந்நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தொண்டையில் ஏற்படும் அரிப்பிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
தினமும் காலை மற்றும் மாலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இதனால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |