வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
வீட்டிலுள்ள பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமானால் வீடு முழுவதும் முடியை பார்க்கலாம்.
ஏனெனின் வீட்டு வேலைகள் செய்யும் பொழுது, சமைக்கும் பொழுது என வேலைகள் செய்யும் பொழுது தலையில் உள்ள முடி உதிர்ந்து அந்த இடங்களில் கிடக்கும்.
சிலருக்கு தலை பயங்கரமாக வியர்க்கும். இந்த பிரச்சினையுள்ளவர்கள் தலையை சொறிந்து கொண்டே இருப்பார்கள்.
வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும் தாங்கிக் கொள்ளலாம், ஆனால் தலையிலிருந்து முடி கொட்ட ஆரம்பித்து விட்டால் அதில் அதிகடிப்பான கவனம் எடுத்து கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தலைமுடி உதிர்வை கட்டுக்குள் வைக்கலாம். அத்துடன் தலைமுடியை சரியாக பராமரிக்க வேண்டும். இவை இரண்டு முயற்சியும் வீடு முழுவதும் கிடக்கும் தலைமுடிக்கு தீர்வு கொடுக்கும்.
அந்த வகையில், தலைமுடி உதிர்வை குறைத்து அடர்த்தியாக தலைமுடியை வளர வைக்கும் எண்ணெய் எப்படி வீட்டில் தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 5
- வெற்றிலை - 2
- தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
எண்ணெய் செய்வது எப்படி?
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் வெற்றிலை ஆகிய இரண்டையும் விழுது போன்று அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து சூடுபடுத்திக் கொள்ளவும்.
மிதமான சூட்டில் காய்ச்சி எடுத்த பின்னர் ஒரு போத்தலில் வடிக்கட்டி ஊற்றி வைக்கலாம். அல்லது அந்த கலவையுடன் ஊற்றி வைக்கலாம்.
இந்த எண்ணெய்யை தலைக்கு குளிப்பதற்கு முன்னர் தலைக்கு தடவி மசாஜ் செய்து விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
அதன் பின்னர் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். எண்ணெயை சூடுபடுத்தி தடவ வேண்டும். இல்லாவிட்டால் சளி பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வெதுவெதுப்பான சூட்டில் தடவுவது சிறந்த பலனைத் தரும். இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் இருக்கும். அதே சமயம் தலைமுடி அடர்த்தியாக வளர்வதையும் பார்க்கலாம். இதனை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார் என்பதால் நம்பகத்தகுந்த முறையாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |