வீட்டின் செழிப்பை கெடுக்கும் செடிகள்.. இனியும் விட்டு வைக்காதீங்க
பொதுவாக ஒரு வீட்டின் செழிப்பு மற்றும் நிம்மதியின் வீட்டின் கட்டமைப்பு மாத்திரம் அல்லாமல் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளும் தாக்கம் செலுத்துகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டது போன்று வீட்டில் வளர்க்கப்படும் சில செடிகள் வீட்டிற்கு அசுபமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கிறது.
இந்த தாவரங்கள் சிலர் அழகிற்காகவும், அறியாமை காரணமாகவும் வைத்திருப்பார்கள். ஆனால் இது போன்ற செடிகள் வீட்டின் முன் வைப்பதால் எதிர்மறையான ஆற்றல்கள் ஈர்க்கப்படுகின்றன.
அந்த வகையில் வீட்டின் நிம்மதிக்கும், செழிப்பிற்கும் ஆபத்து விளைவிக்கும் செடிகள் என்னென்ன என்பதையும், அதனை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. இரவில் மலரும் பூக்கள் கொண்ட தாவரங்கள்
வாஸ்து சாஸ்த்திரங்களில் கூறப்பட்டது போன்று வீட்டுக்கு முன்னர் அதிகமான வாசனை கொண்ட பூக்கள் அல்லது இரவில் மலரும் பூக்கள் கொண்ட செடிகளை மறந்தும் வைக்கக் கூடாது. இதனால் அதனை பின்புறமாக வைத்து வளர்க்கலாம்.

2. மரங்கள் வளர்க்கக் கூடாது
ஆலமரம் மற்றும் அரசமரம் போன்ற மரங்களை வீட்டிற்கு அருகில் வளர்க்கக் கூடாது. இது போன்ற மரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அத்துடன் எதிர்மறையான ஆற்றல்களையும் தன்வசம் இழுக்கும். இரவில் வித்தியாசமான சத்தங்களை எழுப்பும் உயிரினங்கள் இது போன்ற மரங்களில் வாழும். அதனால் உங்களின் தூக்கம் கெடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

3. துளசி செடி
துளசி செடி வைக்கக்கூடாது என பலரும் பதறிப்போவார்கள். ஆமாம், வாடி போய் இருக்கும் துளசி செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது. இது வீட்டின் செழிப்பில் ஏதாவது பிரச்சினை உள்ளது என காட்டிக் கொடுக்கும். மீறி வைப்பவர்களுக்கு இழப்பு, கடன் மற்றும் வணிக ரீதியாக பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |