வீட்டில் பண பிரச்சினையே வராமல் இருக்கனுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
பொதுவாக வீடுகளில் பணக் கஷ்டம் என்பது பலருக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு தீர்வு என்ன என்பது தெரியாமல் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சில ஆன்மீக பரிகாரரம் இதோ...
ஆம் வீட்டில் பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கு எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பணக்கஷ்டத்தினை போக்கும் பொருட்கள்
நீங்கள் எந்தவொரு செயலை செய்யும் போதும், விநாயகரை வணங்கிய பின்பே செயலை செய்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். மேலும் விநாயகர் நடனமாடுவது போன்று இருக்கும் சிலையை வீட்டின் நிலைவாசல் கதவு அருகே வைத்தால் பணக்கஷ்டம் தீர்ந்து போகும்.
வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் இருந்தால் மட்டுமே செல்வம் வீட்டில் வற்றாமல் இருக்கும்.. எனவே அப்படி லட்சுமி கடாட்சத்துடன் இருக்கக்கூடிய பல பொருட்களில் புல்லாங்குழலும் ஒன்றாகும். வீட்டில் பணவரவை அதிரிக்கச் செய்வதற்கு புல்லாங்குழல் சரியான தெரிவாக இருக்கும்.
கடலில் இருந்து கிடைக்கும் சங்கு வீட்டின் பூஜை அறையில் இருந்தால் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்குமாம். ஏனெனில் சங்கை எடுத்து நம் காதின் அருகே வைத்தால், அதிலிருந்து எழும் ஒலி தீய சக்தினை அழிப்பதுடன், லக்ஷ்மி கடாட்சத்தையும் கொடுக்கின்றது.

அனைத்து செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாக இருக்கும் குபேரர் சிலை வீட்டில் இருந்தால் பெரம் அதிர்ஷ்டமாம். இதனை வீட்டின் வடக்கு திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும்.
மங்களகரமான பொருளாகவும், நேர்மறை சக்தியினை வெளியிடும் தன்மை கொண்ட தேங்காய் உங்கள் வீட்டிலும், நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காயை வாரத்திற்கு இரண்டு முறை மாற்றிக் கொண்டு வந்ததால், செல்வ செழிப்புடன் இருப்பதுடன் வீட்டின் பணக்கஷ்டமும் நீங்குமாம்.