அனைவரும் ருசித்து உண்ணும் ருமாலி ரொட்டி- வீட்டிலேயே செய்வது எப்படி?
ருமாலி ரொட்டி பஞ்சாப், பாகிஸ்தான் பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. ருமாலி ரொட்டியை பலரும் கடையில் வாங்கி ருசித்து உண்டு இருப்பீர்கள்.
இப்பதிவில் வீட்டிலேயே எப்படி எளியமையாக ருமாலி ரொட்டியை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
பால், உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு உப்பு சேர்த்து கலக்கவும்.
அதன் பின்னர் அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து கடைசியாக எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும்.

பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.
நான்ஸ்டிக் தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். தேய்த்த ரொட்டியை போட்டு வேக வைக்கவும்.
ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ருமாலி ரொட்டி தயார்