pattani sadham: பிரியாணிக்கே Tuff கொடுக்கும் பட்டாணி சாதம் எப்படி செய்யலாம்
நாம் பிரபலமாக பல உணவுகளை சாப்பிடுவோம். அது நமது நாக்கிற்கு ருசியை தரும். இதை தவிர நாம் வீட்டில் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் பல உணவுகளை செய்ய முடியும்.
அப்படி செய்யும் போது அதை வித்தியாசமாக செய்தால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணுவார்கள்.
நாகரிக அடிப்படையில் பெருநிறுவனங்களால் நாம் பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டோம். இதில் மிக சில உணவுகளை மட்டும் நாம் பண்டிகை அன்று செய்கிறோம். இந்த உணவுகள் பர்கர் பிட்சா போன்ற துரித உணவுகளை விட மிக சுவையானவை.
அந்தவகையில் ஒரு பிரமாதமான சுவை நிறைந்த உணவாக பச்சை பட்டாணி சாதம் மற்றும் அதற்கு உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி - 2
- கப் பட்டாணி - 1 கப்
- பட்டை
- கராம்பு
- ஜாதி பத்திரி
- பச்ச மிளகாய் - 4
- இஞ்சி
- சின்ன வெங்காயம் - 10
- புதினா
- தண்ணீர் - 2 கப்
- எண்ணெய்
- இஞ்சி
- பூண்டு
- அன்னாசி பூ
- பிரியாணி இலை
- பெரிய வெங்காயம் - 1 வெட்டியது
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் பால் - 1 கப்
- நெய் 1 ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் பட்டாணி சாதம் செய்ய மசாலா கலவையை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மிக்ஸியில் பட்டை, கராம்பு, ஜாதி பத்திரி, பச்ச மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம், புதினா இது அனைத்தையும் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை மிகவும் மை போல அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, அன்னாசி பூ, பிரியாணி இலை, பெரிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
இது கொஞ்சம் வதங்கி வந்ததும் அரைத்து வைத்த புதினா மசாலா கலவையை வேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அவித்த பட்டாணியை சேர்த்து நன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
பட்டாணி வதங்கியதும் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி சோக்க வேண்டும். பின்னர் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசி உடையாமல் கலந்து விட வேண்டும். அரிசி எடுத்த அதே கப்பில் ஒரு கப் பால் சேர்க்க வேண்டும்.
இதனுடன் அதே கப்பில் ஒன்றரை கப் வேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வைக்க வேண்டும். பின்னர் கடைசியாக நெய் விட்டு இறக்கினால் பச்சை பட்டாணி சாதம் தயார். இதனுடன் வதை்து சாப்பிட உருளைக்கிழங்கு வறுவல் ஒரு சிறந்த உணவாகும். அவ்வளவு தான் இதன் பின்னர் இதை உங்களுக்கு பிடித்தவாறு சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |