எய்ட்ஸ் நோயின் முக்கிய அறிகுறிகள்... ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பது எப்படி?
எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் மிகவும் வேகமாக பரவும் கொடிய நோய். இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திட முடியும்.
ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டால், சிகிச்சை செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். இன்றைய அரசு மருத்துவ மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் உள்ளது.
அதுமட்டுமின்றி நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் செய்யும் வசதிகள் உள்ளன. இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர் தன்னிடமிருந்து, மற்றவர்களுக்கு தன்னுடைய உடலின் நீர்மங்களை கொடுப்பதன் மூலம் இந்நோய் பல்கிப் பெருகவும் காரணமாக இருப்பதால், உடனடியாக எச்.ஐ.வி-க்கு முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
அறிகுறிகள்
உங்கள் உடல் எடை வழக்கத்தை விடவும் வேகமாக உடல் எடை குறைந்து வந்தால், நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவ்வாறு எடை குறைவது எச்.ஐ.வி-யின் அறிகுறிகளில் ஒன்றாகும். எடை குறைவது இந்நோயின் முன்னேற்றத்தை குறிப்பதாக இருக்கும்.
இதன் அர்த்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கும்.
இருமல்
தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. ஆனால், குப்பைகளை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் கூட இது இருக்கலாம்.
எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்.ஐ.வி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகரிக்கும்.
நகம்
அடுத்ததாக எச்.ஐ.வி கிருமியின் பாதிப்பை உங்கள் நகங்களில் கண்டறிய முடியும். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் விசித்திரமாக இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நகம் பிரிவதும், அவற்றின் வண்ணங்கள் குறைவதும் இதன் ஒரு பகுதியாகும். எனவே, இந்த அறிகுறியை கண்டால் பரிசோதனை செய்து கொள்ளவும்.
களைப்பு
பெரும்பாலான நாட்களில் நேரங்கள் நீங்கள் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தால், அதனை எச்.ஐ.வி பாதிப்பாக கருத முடியும்.
எச்.ஐ.வி-வின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாகவே இந்த களைப்பு நிலை உள்ளது.
மூட்டு வலி
தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்க முடியாத வலிகள் இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதுவும் எச்.ஐ.வி-ன் அறிகுறிதான். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் உலக எய்ட்ஸ் தினங்களில் எய்ட்ஸ் தொடர்பான உண்மைகளும், விளக்கங்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன.
தலைவலி
தலைவலி உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டால், அதனையும் எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம்.
அது எச்.ஐ.வி-க்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ARS பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
தோல்
எச்.ஐ.வி நோயின் ஆரம்ப நிலையே தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால் உங்கள் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு மிக்க பகுதிகள் உருவாகின்றன.
எனவே, உங்கள் தோலை சற்றே நெருக்கமாக கவனிக்கவும்.
கடும் அறிகுறிகள்
தலைவலி மங்கிய சிதைந்த பார்வைஇருமல் மற்றும் மூச்சடைப்புநாக்கிலோ வாயிலோ நிரந்தர வெண்புள்ளிகள் அல்லது அசாதாரண புண்கள் நனைக்கும் இரவு வியர்வை நடுக்கும் குளிர் அல்லது பல வாரங்களுக்கு 100 F (38 C) –க்கு மேல் காய்ச்சல் நீடித்த வயிற்றுப்போக்கு தொடர்ந்து இனம்புரியாத களைப்பு எடை இழப்பு தோல் சொறிகள்
எச்.ஐ.வி உருவாக முக்கிய காரணம்
எய்ட்ஸ் உருவாவதற்கான முக்கிய காரணம் எச்.ஐ.வி உள்ள மனிதருடன் உறவு கொள்வது, பாதுகாப்பில்லாத வாய்வழி, ஆசனவழி உறவு, தகாத உறவு இவையெல்லாம் எய்ட்ஸ் உருவாகுவதற்கான காரணம் ஆகும்.
இவை இல்லாமல் தொற்று உள்ள கர்ப்பிணி பெண்ணிடமிருந்து குழந்தைக்கு பரவுவது, எய்ட்ஸ் உள்ளவர் ரத்தத்தை நாம் பெற்றுக்கொள்வது, அவர் உபயோகப்படுத்திய ஊசியை நாமும் பயன்படுத்துவது, ஓரின சேர்க்கை மூலம், Drug addicts share unsterilized needles with each other இதன் மூலம் எச்.ஐ.வி ஒருவொருக்கொருவர் பரவுகிறது.
தடுக்கும் வழிமுறைகள்
பாதுகாப்பான உறவு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ரத்தத்தை பெறும்போது எய்ட்ஸ் உள்ள நபரா? என்பதை பரிசோதிப்பது மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க முடியும்.
தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதை தகுந்த சிகிச்சை மூலம் தடுக்க முடியும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது சிறந்தது.
எய்ட்ஸ் அறிகுறி எத்தனை நாளில் தெரியும்?
இந்த வைரஸ் உடலில் பரவிய 2 அல்லது 3 மாதங்களுக்கு பின்னரே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
எய்ட்ஸை உண்டாக்குவது எது?
எய்ட்ஸ் நேர்மறையான ஒருவருக்குக் கடுமையான நோய் எதுவும் இல்லை என்றாலும் சில இரத்தப் பரிசோதனைகளைக் கொண்டு (சி..டி.4+ கணக்கிடல்) எய்ட்ஸ் என நோய் கண்டறியப்படும்.
சில நோய்களை எதிர்த்துப் போராட முடியாத நிலைக்கு நோய்த்தடுப்பு மண்டலத்தை எச்.ஐ.வி. தொற்று பலவீனமாக்குகிறது.
இத்தகையத் தொற்றை தருணத்தொற்று என அழைக்கின்றனர்.
கடுமையான நோயை தடுக்க அல்லது மருத்துவம் அளிக்க மருத்துவத் தலையீடு அவசியம் என்ற அளவுக்கு எய்ட்ஸ் உள்ளவரின் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனம் அடைந்துவிடுகிறது.