விபத்தில் தன்னையே மறந்த நபர்.. மீண்டும் சொந்தங்களை சேர்ந்தது எப்படி?
இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த நபர் ஒருவர் விபத்தில் தன்னையே மறந்து, அதன் பின்னர் தன்னுடைய சொந்தங்களை பார்த்த சம்பவம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்தியா- ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கிய பின்னர் தான் யார் என்பதையே மறந்து விட்டார். காலங்கள் அப்படியே ஓடிச் செல்கின்றன.
சுமாராக 45 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பற்றிய ஞாபகங்கள் வெளியில் வர ஆரம்பிக்கிறது. ஹிமாச்சல பகுதியில் Naddi என்னும் கிராமத்திலுள்ள ரிக்கி என்ற சிறுவன், கடந்த 1980ஆம் ஆண்டு, ஹரியானாவிலுள்ள அம்பாலா என்ற இடத்திற்கு வேலைக்காக செல்கிறான்.
அப்போது அவனுக்கு மிகப் பெரிய விபத்து ஒன்று நடக்கிறது. தலையில் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்த பின்னர், மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்க்கிறான்.

ஆனால் அவனுக்கு பெயர் கூட நினைவில் இல்லை என அவனுடன் பேசியவர்கள் தெரிந்து கொண்டார்கள். அங்கிருந்தவர்கள் அவனுக்கு ரவி சௌத்ரி என பெயர் வைத்துள்ளனர்.
அதன் பின்னர், ரவி சௌத்ரியாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய ரிக்கி என்னென்ன விடயங்கள் செய்து, தன்னுடைய பழைய வாழ்க்கையை மீட்டெடுத்தார் என்பதை காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |