கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த 5 உணவுகள் மட்டும் போதும்
உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பல பிரச்சினைகளை சந்திக்கும் நிலையில், ஹை கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஊட்டசத்து மற்றும் ஆக்ஸிஜன் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக இருக்கும் நிலையில், இவை இல்லாமல் இருந்தால் சிறிய செல்கள் இறந்து, இறுதியில் மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சேதமடைகின்றது.
இரத்தம் அதன் இயல்பான வேகத்தில் ஓட, அவை செல்லக்கூடிய நரம்புகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும்.
நமது இரத்த ஓட்டத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் சமநிலை நமது இருதய அமைப்பின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நரம்பு வலி, கை, கால்களில் உணர்வின்மை, மூச்சுத் திணறல், உயர்ரத்த அழுத்தம் நெஞ்சுவலி, சோர்பு இந்த பிரச்சினைகள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அறிகுறியாகும். இவற்றினை குறைக்கும் உணவை குறித்து தற்போது பார்ப்போம்.
ஹை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள்
பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக இருக்கும் பூண்டினை தினமும் 2 முதல் 3 பற்கள் கட்டாயம் சாப்பிட்டு வந்தால், நரம்புகளை அடைக்கும் அழுக்குகள் குறைகின்றது.
இரவில் ஒரு ஸ்பூன் ஆளி விதையை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும்வயிற்றில் சாப்பிட்டால், ஹை கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொடுக்கின்றது.
பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு, சுத்திகரிப்பு கூறுகள் வேப்பிலை இவை அழுக்கு கொலஸ்ட்ராலை நீக்கி நரம்புகளை சுத்தம் செய்கின்றது. 2 அல்லது 3 வேப்ப இலைகளை சுத்தம் செய்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
[
அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த வெந்தய விதைகளை இரவில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் நன்மை கொடுப்பதுடன், உடல் எடையை குறைக்கவும், ஆப்பிள் வினிகரை 1 டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்த கொலஸ்ட்ரால் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |