உடம்பில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கனுமா? இந்த 7 பானங்கள் குடித்தாலே போதும்
நமது உடம்பில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்க வேண்டும் என்றால் உணவில் சில பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும் பானம்
இன்றைய மோசமான உணவுமுறையினால் பலரும் உடல் எடை அதிகரித்து பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிலும் உடம்பில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் உயிரை பறிக்கும் அளவிற்கு பல பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகின்றது.
இயற்கையாகவே சில பானங்கள் கெட்ட கொழுப்பை குறைப்பதாக ஆய்வுகள் கூறியுள்ளன. ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தனது உடம்பில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் தடுக்க சில பானங்கள் நமக்கு உதவுகின்றது. அந்த 7 பானங்களைக் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
கெட்ட கொழுப்பை கரைக்கும் 7 பானம்
பீட்ரூட் சாறு கெட்ட கொலஸ்டரால் அளவை கட்டுக்குள் வைக்கின்றது. இதில் இருக்கும் நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும், ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்கின்றது.
ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ள கிரான்பெர்ரியில் HDL என்ற நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுகின்றது.
ஆஞ்சு சாற்றில் ஹெஸ்பெரிடின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவுகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. எனவே ஃபிரஷ்ஷாக பிழிந்து ஆரஞ்சு சாறு பருகவும்.
எலுமிச்சை சாறு உடம்பை நீரேற்றத்துடன் வைக்க உதவுவதுடன் வைட்டமின் சி சத்துக்களை வழங்கி புத்துணர்ச்சியை அளிக்கின்றது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும். வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.
கேட்டசின் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கிரீன் டீயில் உள்ளது. LDL என்ற கெட்ட கொழுப்பை கரைக்கவும், கொலஸ்ட்ரால் அளவுகளில் சேர்மறையான விளைவை கொண்டிருக்கின்றது.
கிரீன் டீயைப் போன்று பிளாக் டீயிலும் பாலிபினால்கள் நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய ஆரோக்கியத்தில் நன்மை அளிக்கின்றது.
ஓட்ஸ் ஸ்மூத்தி ஓட்மீல், பாதாம் பால், பெர்ரி ஆகியவற்றால் ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரம். இவற்றை பருகினால் இதய ஆரோக்கியம், பல ஊட்டச்சத்துக்களை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |