உயர் ரத்த அழுத்தம் இருக்கா? அப்போ தவறியும் இந்த உணவு சாப்பிடாதீங்க
இன்றைய சமூகத்தில் பலரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் உயர் குருதி அழுத்தப்பிரச்சனை இருப்பவர்கள் நீரிழிவு நோய்க்கு அடுத்ததாக உள்ளனர்.
இந்த சில நேரங்களில் மாரடைப்பை வரவும் செய்யும். இந்த நேரத்தில் உணவு உண்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இந்த ரத்த அழுத்த பிரச்சனையால் பலர் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
உயர் குருதி அழுத்தம் இருந்தால் உடலில் சில சில அறிகுறிகளை காட்டும். மூக்கில் இரத்தம் வடிவது, தலைவலி, மூச்சுத்திணறல் போன்றவையாகும்.
இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் வைத்தியரை நாடுவது நல்லது. இந்த ரத்த அழுத்தத்தின் போது எந்தெந்த உணவுகள் உண்ண கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம்
1.காபி குடிப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இந்த காபியில் அதிகளவு காப்ஃபைன் இருக்கின்றன. இது உடலுக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கூடியது.
இதை அதிகளவில் அருந்தும் போது இதிலுள்ள காப்ஃபைன் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் இந்த உயர் ரத்த அழுத்தப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த காபியை அருந்த கூடாது என்பது மருத்துவரின் அறிவுறுத்தலாகும்.
2.இறைச்சி வகைகள் ஜீரணமாக அதிக நேரம் எடுப்பதால் இந்த உயர் குருதி ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவற்றை உண்ண கூடாது.
மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகளின் தரத்தை பாதுகாக்க போடப்படும் கெமிக்கல்கள் இதய நோய் வருவதற்கு ஒரு காரணமாக அமையும்.
3.ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு சோடியம் நிறைந்த உணவுகளும் ஒரு காரணமாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஊறுகாய்கள் துரித உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். இது இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு இழைக்க கூடும்.