செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை கட்டி ஏற்படுமா? முழுசா தெரிஞ்சுக்கோங்க
பொதுவாகவே தற்காலத்தில் செல்போன் இல்லாத வாழ்க்கையை நம்மில் பலரால் கற்பனை கூட செய்ய முடியாது.அந்தளவிற்கு செல்போன் நம் வாழ்வில் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது என்தே உண்மை.
ஆனால் அதன் அதிகரித்த பாவனை உடல் ஆரோக்கியத்திற்கும் உள ஆரோக்கியத்திற்கும் ஏற்படுத்தும் பாதக விளைவுகள் குறித்து பலரும் சிந்திப்பதில்லை.
அந்தவகையில் செல்போன் கதிர்வீச்சு புற்றுநோய் மற்றும் மூளை கட்டி போன்ற பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இதில் எந்தளவு உண்மையுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்காலத்தில் பல்வேறு வயதினரை பாதிக்கும் மூளை கட்டிகளின் பாதிப்பு அதிகரித்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
IARC (International Association of Cancer Registries) தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் ஆண்டுதோறும் 28,000 இற்கும் மேற்பட்டோர் மூளை கட்டியால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பாதிப்பினால் ஆண்டுதோறும் சுமார் 24,000-க்கும் மேற்பட்டோர் இறப்பதாகவும் ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றது. இதில் 20 சதவீதம் குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
மூளை கட்டியின் ஆரம்ப அறிகுறிகள்
தலைவலி மற்றும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படும். எந்த விடயத்திலும் கவனம் செலுத்த முடியாதது போன்ற உணர்வு ஏற்படுவது இதன் ஆரம்ப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
மேலும் இரட்டை அல்லது மங்கலான பார்வை, முகம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை ஏற்படுதல்.
உடல் பலவீனம், சமநிலை பிரச்சினைகள், குமட்டல் உணர்வு மற்றும் வாந்தி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதனை ஒருபோதும் அலட்சியம் செய்யதது மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். காரணம் இவை மூளை கட்டி இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்.
செல்போன் பயன்பாடு மூளை கட்டியை ஏற்படுத்துமா?
தற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பாவனையாளர்களாக மாறிவிட்டனர். செல்போனை தவிர்த்து வாழ்கை நடத்த முடியயாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாயாது.
இந்நிலையில் செல்போன் பயன்பாட்டிற்கும், மூளைக் கட்டிகளுக்குமான தொடர்பு இருக்கிறதா என பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மூளையில் கட்டிகள் ஏற்படுவதற்கும் அதிகமாக செல்போன் பாவனைக்கும் இடையில் தொடர்பு இருக்க கூடும் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் இவ்வாறான ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் அதிகமாக செல்போன் பயன்படுத்துவது நிச்சயம் உடல் ஆரோக்கியத்துக்கும் உள ஆரோக்கியத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.