ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியத்தினை அதிகமாக அளிக்கும் பழங்கள் நமது உணவில் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவாக பழம் சாப்பிட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப் பழங்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றது. உணவில் எவ்வளவு பழங்கள் சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பழங்கள் குறைவாக சாப்பிட்டால் என்ன பிரச்சினை
பழங்கள் குறைவாக சாப்பிட்டால், நார்ச்சத்து குறையுமாம். எப்பொழுதும் அசைவம் சாப்பிடுபவர்கள், ஆப்பிள், கிவி, பெர்ரி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இவை வீக்கத்தை தடுப்பதுடன், உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கவும் செய்கின்றது.
பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஒளிரச் செய்வதுடன், முகப்பரு மற்றும் சருமத்தில் உலர்ந்து புள்ளிகளையும் குறைக்கின்றது. சரிவிகித அளவில் பழங்களை உட்கொண்டால் தெளிவான, மென்மையான சருமம் கிடைப்பதுடன் வயதாவதையும் தடுக்கின்றது. சருமத்தில் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது.
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற உணவுகளில் A, C மற்றும் K உட்பட பெரும்பாலான வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இவற்றினை போதுமான அளவில் நீங்கள் சாப்பிடவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மூளை செல்களையும் குறைத்து சோர்வு ஏற்படும்.
போதுமான ஊட்டச்சத்து இல்லாவிட்டால் நகம் மற்றும் முடி பிரச்சினை ஏற்படும். உங்களது நகம் மற்றும் முடிக்கு போதுமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ மற்றும் ஈ, பயோட்டின், இரும்பு இந்த ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றது. இவை பழங்களில் நிரம்பியுள்ளது.
சில பழங்கள் மனச் சோர்வின் அபாயத்தை குறைக்கின்றது. பெர்ரிகள் மனநிலையை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய், நீரிழிவு, அல்சைமர் நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 கப் பழங்கள் சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் நீண்ட ஆயுளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.
கண் பார்வையை மேம்படுத்த காய்கறிகள் பழங்கள் முக்கியம் சாப்பிட வேண்டும். நீங்கள் எவ்வளவு பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, உங்கள் கண் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |