யூரிக் அமில பிரச்சனை அவதிப்படுறீங்களா? இந்த பழக்கத்தை நிறுத்திக்கோங்க
இன்றைய காலத்தில் யூரிக் அமில பிரச்சனை பெரும்பாலான நபர்களை அதிகமாக தாக்குகின்றது.
யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் எனப்படும் புரதங்களின் முறிவினால் உடலில் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும்.
இவை சரியான அளவில் நமது உடம்பில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மூட்டுவலி, வீக்கம், நடப்பதில் சிரமம், சிறுநீரகத்தில் கற்கள், சோர்வு, பசியின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.
அன்றாட பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்தவில்லை என்றால் யூரிக் அமிலத்தின் அளவு மேலும் அதிகரித்து பிரச்சனை இன்னும் அதிகமாகும்.
பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?
ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் யூரிக் அமில பிரச்சனையை கட்டுப்படுத்துகின்றது. அதாவது வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுவதை விட்டுவிட்டு, வெளியே விற்கப்படும் துரித உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பதப்படுத்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதிக நேரம் மொபைல் மற்றும் கணினி இவற்றினை பார்த்துக் கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது தவறாகும். ஆதலால் இளம் வயதில் உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறையினை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் நச்சுக்கள் அதிகமாகி யூரிக்அமிலத்தை அதிகரிக்கும்.
வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை எதுவாக இருந்தாலும் மனதை இயல்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் இன்று பலருக்கும் அதிகமாக இருப்பதால் இதனால் கார்டிசோலின் அளவு அதிகரித்து செரிமானத்தை பாதிப்பதுடன், குடல் பிரச்சனையை அதிகரிப்பதுடன் யூரிக் அமில பிரச்சனையையும் அதிகரிக்கும்.
உடம்பிற்கு தேவையான தண்ணீரை கட்டாயம் பருக வேண்டும். ஏனெனில் நீரிழப்பு கூட பியூரின் பிரச்சனை ஏற்படுத்துகின்றது.
உடல் எடையைக் குறைப்பதற்கு பல டயட்கள் மேற்கொள்வதும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது. பலவித கிராஷ் டயட்டானது எடையை இழப்பதுடன், முடிந்தவரை கலோரிகளை குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |