மனைவியை 1.5 லட்சத்துக்கு விற்று விட்டு எஸ்கேப்பான கணவன்....பேரதிர்ச்சியில் உறைந்த போலீஸ்
மனைவியை 1.5 லட்சத்துக்கு விற்று விட்டு தப்பிச் சென்ற கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் - நீமுச் மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் சுப்ரியா பிரஜாபதி என்ற பெண் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.....கொதித்தெழுந்த இளம் நடிகை!
விசாரணையில், ‘அந்த பெண்ணுக்கு ஒரிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவருடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதும், அவருடன் சண்டை போட்டதற்காக ரூ.1.5 லட்சத்திற்கு விற்றுவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணை வாங்கிய மனோஜ் பிரஜாபதி அவரை கட்டாய திருமணம் செய்து ராஜஸ்தான் சென்று கணவன் மனைவியாக வாழலாம் என்று கூட்டிச் செல்லும்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ‘நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே ரூ1.5 லட்சம் கொடுத்தேன்.
அவள் ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவள் என்பது எனக்குத் தெரியாது’ என்று மனோஜ் பிரஜாபதி கூறியுள்ளார்.
தற்போது மனோஜை போலிஸார் கைது செய்துள்ளனர்.
நண்பர்களாக இருந்தாலும் இந்த 3 ராசிக்காரங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கனுமாம்
அடுத்ததாக் கணவனையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சண்டை போட்டதற்காக மனைவியை விற்ற சம்பவம் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.