மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
பிரபல சீரியல் நடிகையான சாவி மிட்டல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சாவி மிட்டல் என்பவர் பஹுரானியா 3, கர் கி லக்ஷ்மி பெட்டியான், பந்தினி, நாகின், விராசத் உட்பட பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர். இவர், அண்மையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் அன்பான மார்பகம்., இது உங்களுக்கான பதிவு.
உங்களின் மகத்துவத்தை நான் முதலில் கவனித்து, எனக்கு மகிழ்ச்சியை அளித்தபோதுதான். எனது 2 குழந்தைகளுக்கும் உணவளிக்கும் போது உங்களின் முக்கியவத்துவதை உணர்ந்தேன். இன்று நான் உங்களுக்காக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்கொண்டு போராடி வருகிறேன். உங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை நல்ல விஷயம் கிடையாது என்றாலும், என் மனதை அவை ஒருபோதும் சீர்குலைக்காது.
இது எளிதாக இருக்கப்போவதில்லை என்று தெரிந்தாலும், அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு நம்பிக்கை அளித்து மீண்டு வர பிராத்திக்கின்றனர்.
ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்