இரவு உணவை தாமதமாக சாப்பிடுறீங்களா? இந்த ஆபத்துகளை தெரிந்துகொள்ளுங்கள்!
இன்றைய வாழ்க்கை முறையில், வேலை, படிப்பு மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கம் காரணமாக பலர் இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த பழக்கம் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.
இவ்வாறு தொடர்ர்ச்சியாக தாமதமாக இரவு உணவு சாப்பிடுவதால் ஏற்படும் முக்கிய ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய பாதிப்புகள்
உடல் எடை அதிகரிப்பு: இரவில் உடலின் செயல்பாடு குறைவதால், அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக சேமிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கும்.
செரிமானக் கோளாறுகள்: அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
ரத்த சர்க்கரை மாற்றம்: இரவு நேரத்தில் அடிக்கடி தாமதமாக உண்பது, ரத்த சர்க்கரை அளவை பாதித்து நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

தூக்கக் கோளாறுகள்: தாமதமான உணவு மற்றும் செரிமான சிரமம் காரணமாக தூக்கமின்மை, தூக்கத் தரம் குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சருமப் பிரச்சினைகள்: பருக்கள், அலர்ஜி மற்றும் தோல் தொடர்பான பாதிப்புகள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்: போதிய தூக்கமின்மை மற்றும் செரிமானக் கோளாறுகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். அதனால் எளிதில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை சரியான நேரத்தில், அளவோடு சாப்பிடுவது மிகவும் அவசியம். உறங்குவதற்கு குறைந்தது 2–3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துக்கொள்வது நல்லது.
மேலும் இரவு உணவுக்கு பின் 20 தொடக்கம் 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்வது இன்னும் சிறந்தது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களை இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |