அஜித்தின் தந்தை பற்றிய சில உருக்கமான தகவல்கள்! தந்தைக்காக செய்த தியாகம்
மறைந்த நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.எஸ் மணி குறித்து சில உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இரகசியம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார், இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
அனைத்தும் ஒரே இரவில் அஜித்துக்கு கிடைத்துவிடவில்லை, ஆரம்ப காலங்களில் மிகவும் சிரமப்பட்டு தன்னம்பிக்கையை கைவிடாது விடாமுயற்சியுடன் சூப்பர் நாயகனாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
படிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் வேறு வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் அஜித்.
சினிமாவிலும் தொடக்க காலங்களில் சில படங்கள் கைவிடப்பட ராசி இல்லாத நடிகர் என பலரும் முத்திரை குத்தினர்.
அஜித்தின் தந்தை குறித்து உருக்கமான பதிவுகள்
சிறுவயதில் இருக்கும் போது அஜித் குமாரை கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ரேஸ்கள் பார்ப்பதற்கு அவரின் தந்தை அழைத்து செல்வாராம். இதனால் தான் ரேஸ்கள் செய்வதற்கு அஜித்திற்கு ஆர்வம் வந்துள்ளது.
மேலும் பைக் மீது ஆசையால் பைக் மெக்கானிக்காக 6 மாத காலம் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த வேலை அவரது தந்தைக்கு பிடிக்காததால், கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளையும் கட்டுக்கோப்புடனும் அதே சமயம் நண்பனாகவும் இருந்து கவனித்து வளர்த்து வந்துள்ளார் அஜித்குமாரின் தந்தை.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் என எது செய்வதாக இருந்தாலும், என் முன் செய்ய வேண்டும் என கூறுவாராம்.
அஜித் கஷ்டப்படும் போது எல்லாம் அவரின் தந்தை உறுதுணையாக இருந்துள்ளார்.
மேலும் பிள்ளைகளின் வாழ்க்கையில் எடுக்கும் முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் பிள்ளைகளே தான் முடிவு செய்வார்களாம், அந்தளவுக்கு சுதந்திரமும் கொடுத்துள்ளார்.