தந்தையின் உடலை தூக்கிச் சென்ற அஜித்! மரணத்திற்கு இது தான் காரணமாம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை காலமானார்.
அஜித்குமாரின் தந்தை பி. சுப்ரமணியம், வயது 84, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தவர்.
இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது, இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி அஜித் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அஜித்குமாரின் சகோதரர்கள் உட்பட அனைவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
Official statement from Actor Ajith Kumar and his brothers about the passing away of their father..#RIPPSManiSir pic.twitter.com/ITqySzzhBc
— Ramesh Bala (@rameshlaus) March 24, 2023
இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். அனுப் குமார்.. அஜித் குமார்.. அனில் குமார் " என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தந்தைக்கு இறுதிச்சடங்குகளை செய்யும் அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
#Ajithkumar? #AjithKumar #Ajith pic.twitter.com/ojkA1am3LV
— அட்டகாசம் MOHAN??? (@Mohanra16652998) March 24, 2023