தாய் என நினைத்து போஸ்டர் பின்னால் ஓடி சென்ற குதிரை குட்டி! இதயத்தை உருக்கும் புகைப்படம்
இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன.
அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் அல்லது மனதை தொடும் வகையிலான செய்கைகள் சில சமயங்களில் நமது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
சில சமயங்களில் நமது கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும்.
அந்த வகையில் குதிரை ஒன்றின் புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. தாய் என நினைத்து புகைப்படத்தின் பின்னால் குதிரை குட்டி ஓடியுள்ளது.
பேருந்து கிளம்பிய போது குதிரை படத்தைப் பார்த்தபடியே பேருந்தை துரத்தி சென்று கத்தியது. குதிரை குட்டியின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
