தூக்கத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் தெரியுமா?
பொதுவாகவே தற்போது பல காரணங்களால் வயது வித்தியாசம் பார்க்காமல் பல நோய்கள்வந்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் இந்த மாரடைப்பு சாதாரண ஒரு விடயமாக மாறிவிட்டது.
இரவு நன்றாக தூங்கப் போனவர் காலையில் எழுந்து பார்த்தால் மாரடைப்பால் இறந்த செய்தியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
நமது இதயம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்வதால் அவை சீராக செயல்படும் இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் தமனியில் தடை ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
அதிலும் இந்த மாரடைப்பு இரவில் தூக்கும் போது தான் பலரும் இறந்து போகிறார்கள் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி தற்போது ஆராய்வோம்.
தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட காரணம்
லாங் க்யூடி சிண்ட்ரோம், ப்ருகாடா சிண்ட்ரோம் மற்றும் ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி போன்ற சில மரபணு நிலைகள் திடீர் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்
பிறவி இதயக் குறைப்பாடு அல்லது பிற கட்டமைப்பு கோளாறு
ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் திடீர் இதயத் தடுப்புக்கு வழிவகுக்கும்
உடல் பருமன், நீரிழிவு மற்றும் சில தன்னுடல் தாக்கக் கோளாறுகள்
எவ்வாறு தடுப்பது?
வழக்கமான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளல்
சீரான உணவுப் பராமரிப்பு, உடல் சுறுசுறுப்பு மன அழுத்தத்தை நிர்வகித்தல்.
புகைத்தல் அல்லது மது அருந்துதலை தவிர்த்தல்
நெஞ்சு வலி, மயக்கம், அல்லது படபடப்பு போன்ற அறிகுறிகள் அறிந்து சரியான நேரத்தில் மருத்துவத்தை நாடுதல்.
குடும்பத்தில் இதயக்கோளாறுகள் உள்ளதா என்பதை அறிந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மரபு வழி நிலைமைகளை அடையாளம் கண்டுக் கொள்ளல்
இளம் வயதினருக்கு இதய ஆரோக்கியம் பற்றி கற்பித்தல் அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |