ஆண்களை குறிவைக்கும் மாரடைப்பு: தினமும் 2 பூண்டை இப்படி சாப்பிட்டால் இப்படியொரு பலனா?
பொதுவாகவே தற்போது பல காரணங்களால் வயது வித்தியாசம் பார்க்காமல் பல நோய்கள்வந்த வண்ணம் தான் உள்ளது.
அதிலும் இந்த மாரடைப்பு சாதாரண ஒரு விடயமாக மாறிவிட்டது. இரவு நன்றாக தூங்கப் போனவர் காலையில் எழுந்து பார்த்தால் மாரடைப்பால் இறந்த செய்தியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மாரடைப்புக்கு பூண்டு சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
மாரடைப்பு
நமது இதயம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்வதால் அவை சீராக செயல்படும் இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் தமனியில் தடை ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
இந்த மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் 15நிமிடங்களுக்கு மேல் மார்பு வலியை ஏற்படுத்தும் சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமலும் ஏற்படும்.
மாரடைப்பானது புகைப்பிடித்தல், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், கடின உழைப்பு போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்பு தற்போது அதிகம் ஆண்களை பாதிப்பதால் ஆண்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்கிறது இந்த பூண்டு.
மாரடைப்பிற்கு உதவும் பூண்டு
பூண்டில் அல்லில்சிஸ்டின் எனும் வேதிப் பொருள் இருப்பதால் அது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
மேலும், பூண்டு சாபிடுபவர்களுக்கு இதய தசைகள் வலுவாகுவது மட்டுமல்லாமல் இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படுவதையும் தடுக்கும். குறிப்பான ஆண்கள் தினமும் 2 பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் இல்லாமல் போகும்.
அதேபோல பூண்டை வறுத்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரோலை இல்லாமல் செய்து இதய பிரச்சினைகளையும் மாரடைப்பு பிரச்சினைகளையும் குறைக்கும்.