நடிகர் மாரிமுத்து உயிரை காவு வாங்கிய நோய்? மருத்துவ விளக்கம்
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.
பொதுவாக தற்போது இருப்பவர்களை அதிகமாக தாக்குகின்ற நோய்களில் மாரடைப்பும் ஒன்று.
இந்த நோயான இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன.
இது இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன.
இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் இரத்த அளவில் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டு பல முன்னணி நடிகர்கள் இறந்துள்ளனர். இது தமிழ் சினிமா உட்பட முழு திரையுலகிற்கும் ஒரு இழப்பாகவுள்ளது.
இந்த நிலையில் இதய நோயின் அறிகுறிகளும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இதய நோயின் அறிகுறிகள்
1. மார்பு வலி, மார்பு இறுக்கம், மார்பு அழுத்தம் மற்றும் மார்பு அசௌகரியம்
2. கால்கள் மற்றும்/அல்லது கைகளில் வலி, பலவினம் அல்லது உணர்வின்மை
3. கைகள், கழுத்து, தோள்பட்டை, தாடை மற்றும் முதுகில் வலி அல்லது அசௌகரியம்
Image - godigit
4. மூச்சுத் திணறல் 5. உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு செயல்பாட்டின்போது எளிதில் சோர்வடைதல்
6. இதய தாளத்தில் மாற்றங்கள்
7. மிக வேகமாக அல்லது மெதுவாக இதயத்துடிப்பு, பதற்றம் அல்லது மார்பில் படபடப்பு
8. மயக்கம், தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
9. பலவீனம் அல்லது சோர்வு
Image - mdpremier
10. கைகள், கால்கள், கணுக்கால் அல்லது கால்களின் வீக்கம்
11. காய்ச்சல்
12. தோல் தடிப்புகள் அல்லது அசாதாரண புள்ளிகள்
13. உலர் அல்லது தொடர் இருமல்
ஆபத்து காரணிகள்
இதய நோய்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. அதில் பரம்பரை காரணமாக ஏதுவும் பிரச்சினை இருந்தால் அதனை மாற்ற முடியாது.
மாறாக அவரின் உடல் நிலையில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதனை மருந்துகளால் சரிச் செய்து கொள்ளலாம்.
இதய நோயை கட்டுபடுத்தும் காரணிகள்
1. ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல்.
2. புகையிலை பயன்பாட்டைத் தவிர்த்தல்.
3. மது பாவணை தடுத்தல்.
4. மன அழுத்த பிரச்சினை இருந்தால் அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளல்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |