Heart Attack: அமைதியாக இருந்து உயிரை காவு வாங்கும் மாரடைப்பின் அறிகுறி என்ன?
தற்போது இளம் வயதிலேயே மாரடைப்பு வருவது அதிகரித்து வருகின்றன. முற்காலத்தில் முதியவர்கள் அல்லது நடுத்தர வயதினர்களுக்கு மாரடைப்பு வந்து கொண்டிருந்தது.
ஆனால் தற்போது இளைஞர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மாரடைப்பால் இறக்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் மாரடைப்பு ஒரு பரம்பரை நோயாக மாறிவிட்டது. இந்த நோயை வந்த ஆரம்பத்திலேயே தடுப்பது நல்லது. இதை எவ்வாறு அறிவது எப்படி தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
\
மாரடைப்பு
மாரடைப்பு என்பது உடலுக்கு போதிய இரத்த விநியோகம் இல்லாத நிலையால் இது திசு சேதத்தால் ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை நிறுத்தும்.
இந்த காரணத்தினால் இதய தசை சேதமடைகிறது அல்லது இறக்கிறது. இதன் முக்கிய காரணம் கரோனரி தமனி நோய், தமனியில் அடைப்பு பெரும்பாலும் பிளேக் குவிவதால் ஆகும்.
இது பொதுவாக வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. மாரடைப்பிற்குப் பின்னர் உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அந்த நபர் இறக்கக்க நேரிடும்.
அதே நேரம் மாரடைப்பு வருவதற்கு முன்னர் நம் உடல் பல வகையான அறிகுறிகளை காட்டி கொடுக்கும். எனவே மாரடைப்பு தாக்குதலுக்கு முன் அறியப்படும் அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அறிகுறிகள்
மாரடைப்பு வருவதற்கு முன்னர் மார்பை சுற்றி மிகவும் அதிகமான வலியை நீங்கள் உணர்ந்தால் அது உங்களுக்கு மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.
இத்தகைய நிலைமைகளில் உள்ள நோயாளிகள் மார்பின் நடுவில் மார்பு இறுக்கம், கனம் அல்லது வலியை அனுபவிக்கலாம். இது வருவதற்கு 10 நாட்களுக்கு முதல் ஒரு மாதம் வரை நோயாளிகள் சோர்வை அனுபவிக்கலாம்.
இதயத்திற்கு போதிய இரத்த சப்ளை இல்லாததால், நோயாளிகள் அதிகமாக வியர்க்கும்.சிலர் அஜீரணம் அல்லது குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.
இதயத்திற்கு போதியளவு ரத்தம் கிடைக்காமல் இருப்பதால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இந்த நோயாளிகளின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அதாவது மார்பு, முதுகு, தோள்கள், கைகள், கழுத்து மற்றும் தாடை ஆகியவற்றில் வலியை அனுபவிக்க நேரிடும்.
இதயத்தில் பிரச்சனை ஏற்படும் போது, ஆர்ட்டிரிஸ்களில் அடைப்பு ஏற்படும். இதனால் வலி ஏற்படுகிறது.கரணமின்றி தலைசுற்றுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
லைச்சுற்றல், தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல், குறைந்த இரத்த அளவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மெதுவான அல்லது வேகமான இதயத் துடிப்பு மற்றும் மார்பில் அசௌகரியம் உணர்வு வாயு இருப்பது போன்ற உணர்வு ஏற்படல். இவை அனைத்தும் மாரடைப்பு வருவதற்கு முன்னர் வரும் அறிகுறிகளாகும்.
இதை தடுத்தல்
அதிக எடையுடன் இருப்பது இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். நாள்தோறும் வழக்கமான உடற்பயிற்சி முக்கியமானது.
வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது இதய நோய் அபாயத்தை பெருமளவில் குறைக்கும். புகைப்பிடிப்பதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் விட்டுவிடுவது நல்லது.
இதன்போது மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து தேவைப்பட்டால் மருந்தைப் பயன்படுத்தவும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது இதய ஆரோக்கிய அபாயங்களைக் குறைக்கும்.மன அழுத்தத்தை சமாளிக்க, யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். ஆரோக்கியத்தை தவறாமல் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இதயம் தொடர்பான நோய் இருந்தால் வழக்கமான பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. எனவே ஆரோக்கியமான உணவைச் சேர்த்துக் கொள்ளுங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.
இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உணவின் மூலம் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |