நாடித்துடிப்பே இல்லாமல் உயிர்வாழ்ந்த உலகின் முதல் மனிதர் இவர் தான்!
நாடித்துடிப்பே இல்லாமல் ஒருவர் உயிர்வாழ்ந்து சாதனைப்படைத்துள்ளார். மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமானது நாடித்துடிப்பு.
அந்த நாடித்துடிப்பே இல்லாமல் ஒருவர் உயிர்வாழ்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான் கிரேக் லூயிஸ் என்ற நபர் இதயத்துடிப்பே இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
கிரேக் லூயிஸ்
இவருக்கு கடந்த 2011ம் ஆண்டு amyloidosis என்ற எதிர்ப்பு சக்தியால் (autoimmune disease) பாதிக்கப்பட்டதால் கிரேக் லூயிஸுக்கு அசாதாரணமான புரதங்களை உருவாக்கி இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளையும் சேதப்படுத்தியிருந்தது.
இதனால் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மருத்துவர்கள் பில்லி கோன் மற்றும் பட் ஃப்ரேசியர் இருவரும் கிரேக் லூயிஸுக்கான ரத்த ஓட்டத்தை தடுக்காமல் இருக்க பல்ஸ் இல்லாத கருவி ஒன்றை பொருத்த நினைத்தார்கள்.
அதற்கேற்ப அந்த கருவியை உருவாக்கி 50 கன்றுகளிடம் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதாவது 50கன்றுகளின் இதயத்தை எடுத்துவிட்டு அக்கருவியைப் பொருத்தி இதயத்திற்கு இரத்தம் செல்லாமல் அக்கன்றுகள் உயிர் வாழ்ந்துள்ளனர்.
இக்கருவி வெற்றிபெற்றதையடுத்து கிரேக் லூயிஸ் மனைவி சம்பதத்துடன் அவருக்கு அந்தக் கருவி உடலில் பொருத்தப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கிரேக் லூயிஸின் கிட்னி மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகவே 2011ஆம் ஆண்டு உயிரிழந்திருக்கிறார்.
இவர் சுமார் ஒரு மாதம் இதயத்துடிப்பே இல்லாமல் கிரேக் லூயிஸ் உயிர்வாழ்ந்திருக்கிறார் என வைத்தியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.