இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் வேண்டாம்! காது கேட்காமல் போய்விடும்
பொதுவாகவே வயது ஏற ஏற சில உடற்பாகங்கள் தமது செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கிவிடும். ஆனால், இந்த காது கேளாமை பிரச்சினை என்பது இந்த வயதில்தான் வரும் என்று கூறமுடியாது.
செவியானது, கொஞ்சம் கொஞ்சமாக தனது கேட்கும் திறனை இழக்கின்றது என்பதை கீழ்க்காணும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கூட்டம் கூடும் இடங்களை தவிர்த்தல்
திருமணங்களிலோ, பொது நிகழ்வுகளிலோ அல்லது நிறைய பேர் கூடியிருக்கும் இடங்களிலோ ஒருவர் பேசுவதை புரிந்து கொள்வதற்கு சிரமப்பட்டாலோ அல்லது அத்தகைய கூட்டம் கூடும் இடத்தை தவிர்த்தாலோ அது காது கேட்கும் திறனை இழப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
முணுமுணுப்பு
அமைதியான சூழலாக இருந்தாலும்கூட ஒருவர் பேசும் வார்த்தைகள் சரியாக புரியாமல் அவர்கள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதை போல் உணர்தல்.
திரும்பக் கேட்டல்
“நீங்கள் கூறியதை திரும்பக் கூற முடியுமா?, நீங்கள் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”போன்ற வார்த்தைகள் காது கேளாமைக்கான ஆரம்பமாக இருக்கலாம்.
தொலைக்காட்சி சத்தத்தை அதிகரித்தல்
தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சத்தத்தை அதிகமாக வைத்து பார்த்தல்.
தொலைபேசியில் பேச சிரமப்படுதல்
தொலைபேசியில் பேசும்பொழுது நீங்கள் பேசுவது எனக்கு சரியாக கேட்கவில்லை, குரல் தெளிவில்லாமல் இருக்கின்றது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தல்.
மேற்கூறப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் காது கேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதற்கான அறிகுறிகளாகும். எனவே காது கேட்கும் திறனை முழுமையாக இழப்பதற்கு முன்னர் வைத்தியரை நாட வேண்டிய அவசியம்.