இருமல், சளியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ துளசியில் இப்படி ரசம் செய்து சாப்பிடுங்க
பொதுவாகவே சளி மற்றும் இருமல் பிரச்சினை சிறியர்கள் முதல் பொரியவர்கள் வரையில் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய உடல் உபாதைகளுள் ஒன்றாகும்.
தடுமன் பிடித்துவிட்டாலே எந்த விடயத்திலும் கவனம் செலுத்த முடியாது. இந்த நேரத்தில் பொியவர்களே குழந்தைகள் போல் மாறிவிடுவார்கள் என்றால் குழந்தைகளின் நிலை பற்றி சொல்லவும் வேண்டுமா, இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கொடுக்கும் ஒரு முலிகை தான் துளசி.
துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன் இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி அதிகமாக காண்படுகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட துளசி இலையை கொண்டு எவ்வாறு அட்டகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ரசம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
துளசி இலை
மிளகு
புளி
கடுகு
எண்ணெய்
உப்பு
துவரம் பருப்பு
தனியா
சீரகம்
செய்முறை
முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் புளியை நன்றாகக் கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்கு நேரத்திற்குள் துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஊற வைத்த பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொதிக்கும் புளிக் கலவையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக கொதித்த பின்னர் துளசியையும் அரைத்து மேற்கண்ட புளிக் கலவையுடன் சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கிவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகையும் தாளித்து அதில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமும் சுவையயும் நிறைந்த துளசி ரசம் தயார்.
இது இருமல், சளிக்கு உடனயாக தீர்வு கொடுக்கும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் உகந்த ரசமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |