இதய நோய், எலும்புகளை உறுதியாக்கும் பிரண்டை துவையல்- அரை நொடியில் செய்து ருசியுங்கள்
பொதுவாக பிரண்டை இதயத்திற்கும், எலும்பு தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கிறது.
அத்துடன் பிரண்டையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பற்களுக்கும் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் செரிமானம் சீராக நடக்கும்.
அந்த வகையில் உடல் கொழுப்பைக் கரைத்து சிலிம்மாக மாற்றும் பிரண்டையில் எப்படி துவையல் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரண்டை - 3/4 கப்
- நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - தே.அ
- இஞ்சி - 1/2 துண்டு
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- தேங்காய் துருவியது - 3 மேசைக்கரண்டி
- உப்பு - தே.அளவு
துவையல் செய்வது எப்படி?
முதலில் பிரண்டையைக் கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஏனெனின் வெறும் கையால் பிரண்டையை தொடும் போது ஒரு வகை அரிப்பு உண்டாகும்.
துவையலுக்கு தேவையான மற்ற பொருட்களை தயார் செய்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்தம் பருப்பை போட்டு வதக்கவும்.
உளுந்து பொன்னிறமானதும் காய்ந்த மிளகாய், இஞ்சி இரண்டையும் தனித்தனியாக சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பொருட்களை ஒரு தட்டில் கொட்டி விட்டு பிரண்டையை தனியாக கடாயில் போட்டு சுருங்கும் அளவிற்கு வதக்கவும்.
பின்னர் மொத்தமாக அனைத்தையும் சுத்தமான மிக்ஸி ஜாரில் உப்பு சேர்த்து அரைக்கவும். அம்மி இருந்தால் அதில் அரைக்கலாம்.
சுவையான நன்றாக இருக்கும். மா பதத்திற்கு அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் தயார்!
கஞ்சி, ரொட்டி இப்படியான உணவுகளுடன் வைத்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |