வேலை பார்த்ததும் சோர்வு ஏற்படுகின்றதா? இந்த உருண்டையை எடுத்துக்கோங்க
உடலுக்கு உறுதியளிக்கும் ராகி சிமிலி உருண்டை எவ்வாறு செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபருக்கு சிறிது நேரம் வேலை செய்தாலும் உடல் சோர்வாகிவிடும். இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கியமாக காரணமாக இருக்கின்றது.
இந்நிலையில் புரதம், இரும்புச்சத்து நிறைந்த ராகி சிமிலி உருண்டை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு,
உப்பு,
தண்ணீர்,
எண்ணெய்,
வேர்க்கடலை,
வெள்ளை எள் மற்றும்
ஏலக்காய்
செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் அரை கிலோ ராகி மாவு மிதமான சூட்டில் வாசனை வரும்வரை வறுக்கவும்.
பின்பு வறுத்த மாவுடன், தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை தட்டி சப்பாத்தி போன்று தோசை கல்லில் போட்டு சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
மேலும் அடுப்பில் இருக்கும் கடாயில் வேர்க்கடலை, வெள்ளை எள், சிறிது ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
தற்போது சுட்டு வைத்திருக்கும் ரொட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வறுத்து வைத்திருக்கும் பொருட்கள், முக்கால் கிலோ வெல்லம் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கைகளில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு, குட்டி குட்டி உருண்டையாக உருட்டி எடுத்தால் சுவையான ராகி சிமிலி உருண்டை தயார்.
இதில், கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய சத்துகள் இருப்பதால், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |