ராகி நெல்லி கஞ்சியின் நன்மை பற்றி தெரியுமா? - வாரத்தில் 3 நாள் குடிங்க போதும்
பலருக்கும் நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரியாது. ராகி மாவை எல்லோரும் விரும்ப மாட்டார்கள். வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடண்ட்களின் பொக்கிஷம்.
வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்க உதவும். கஞ்சி என்பது அரிசி அல்லது தானியங்களை நீர் சேர்த்துக் காய்ச்சி, ஒருவிதத்தில் சமைக்கப்படும் ஒரு வகை உணவு.
இது பொதுவாக ஒரு மென்மையான, அடர்த்தியான திரவ உணவாக தயாரிக்கபடும். இந்த கஞ்சியை நெல்லிக்காய் ராகி மாவு கொண்டு செய்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- ராகி மாவு - 2 தேக்கரண்டி
- நெல்லிக்காய் பொடி - 1 தேக்கரண்டி
- ஒரு கப் பசும்பால்
- நறுக்கிய பாதாம் அல்லது வால்நட்
- மாதுளை விதைகள் - தேவைக்கேற்ப
- நறுக்கிய 3 பேரிச்சை பழங்கள்
- சியா விதை - 1 கரண்டி (ஊறவைத்தது)
- மஞ்சள் பொடி - தேவையான அளவு
- லவங்கப்பட்டை பொடி -1/4 ஸ்பூன்
- மிளகுப் பொடி - 1/4 ஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை - 1 ஸ்பூன்
ராகி நெல்லி கஞ்சி செய்முறை
ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் ராகி மாவை போட்டு வாசனை வருமளவுக்கு வறுக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் பசும்பாலை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும்.
பசும்பால் கொதித்த பின் இறக்கிவையுங்கள். வறுத்த ராகி மாவுடன் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறுங்கள். மாவு கட்டிப் பிடிக்கக் கூடாது.
தொடர்ந்து கலக்கி கொண்டே இருங்கள். மிகக் குறைந்த தீயில் தான் இப்படி கிளற வேண்டும். கஞ்சி பதத்திற்கு வரும்போது நெல்லிக்காய் தூள், மஞ்சள் பொடி, இலவங்கப்பட்டை பொடி, மிளகுத் தூள் போன்றவற்றை போட வேண்டும்.
பின் 2 முதல் 3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிட வேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதல் பால் சேர்க்கலாம். பின்னர் பேரிச்சம் பழம், நாட்டுச் சர்க்கரை போட்டு கிளறி விடுங்கள்.
அனைத்து பொருள்களும் நன்கு கலந்த பின் அடுப்பை அணைக்கலாம். சுவையான ராகி நெல்லி கஞ்சி தயாராகிவிடும்.
இதை பெரிய கிண்ணத்தில் ஊற்றி அதன் மீது மாதுளை விதைகள், ஊறவைத்த சியா விதை, நறுக்கிய பாதாம் அல்லது வால்நட் போட்டுக் குடித்தால் அமிர்தமாக இருக்கும். வாரத்திற்கு 3 நாட்கள் குடிக்கலாம். நாளடைவில் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |