10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஓட்ஸ் பிட்டு எப்படி செய்யலாம் தெரியுமா?
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பொதுவாக பிட்டு சாப்பிடுவார்கள். பிட்டு அரிசி மா, கோதுமை மா போன்றவற்றால் செய்யப்படும்.
இந்த பதிவில் ஓட்ஸ் பிட்டு செய்யும் ரெசிபியை பார்க்கலாம். ஓட்ஸ் மிகவும் சத்து வாய்ந்த உணவாகும். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் - 1 கப்
- துருவிய தேங்காய் - தேவைக்கேற்ப
- வெல்லம் - இனிப்பிற்கேற்ப
- முந்திரி - 7
- ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
- நெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - 3 ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்யும் முறை
ஒரு மிக்ஸியில் ஓட்ஸ் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உதிரிப் பருவமாக பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை பிட்டு அவிக்கும் பாத்திரத்தில் இடைக்கிடையே தேங்காய்ப்பூ பொட்டு அவித்து எடுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் உடைத்த முந்திரியை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
அதனுடன் வேக வைத்த ஓட்ஸ் மற்றும் தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்து அதில் அந்த வெல்லபாகை சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் ஆரோக்கியமான ஓட்ஸ் பிட்டு ரெடி.