செட்டிநாட்டு ஸ்டைலில் முட்டை கிரேவி இப்படி செய்ங்க சாப்பிடாம இருக்க மாட்டீங்க!
அசைவ சாப்பாடு என்றால் எம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயம். அசைவ உணவுகளை பல்விதமாக சமைத்து சாப்பிடும் போது அது இன்னும் சுவையை கொடுக்கும்.
உணவு எந்த அளவிற்கு சத்தாக இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு சுவையாகவும் இருக்க வேண்டும். இன்னைறய பதிவில் சுவையாகவும் சத்தாகவும் செட்டிநாட்டு முட்டை கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை - 3
- பெரிய வெங்காயம் - 1
- உப்பு - சுவைக்கேற்ப
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - 2
- பூண்டு - 3 பல்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
- கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1
- பெருஞ்சீரகம் - 1டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்யும் முறை
முதலில் முடடையை வேக வைத்து அதை தோல் நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய், தக்காளி, கருப்பு மிளகு, பூண்டு, பெருஞ்சீரகம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை வறுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். இப்போது சுவை பார்த்துவிட்டு இறக்கினால் செட்டிநாட்டு முட்டை கிரேவி தயார்.