மூட்டு வலியால் அவதியா? தினம் ஒரு முடக்கத்தான் தோசை செய்யலாமே!
முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கும். முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கிறது.
இதை உணவில் தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும். முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கின்றது.
நாம் தினமும் காலை உணவு செய்யும் போது இந்த கீரையில் செய்தால் உடல் ஆரோக்கியத்தில் இது மிகவும் நன்மை தரும்.
தேவையான பொருட்கள்
- முடக்கத்தான் கீரை இரண்டு கப்
- மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
- சின்ன வெங்காயம் 10
- புழுங்கல் அரிசி இரண்டு கப்
- உளுத்தம் பருப்பு அரை கப்
- கல் உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் நான்கு டேபிள் ஸ்பூன்
செய்யும் முறைகள்
முதலில் முடக்கத்தான் கீரையை நன்கு கழுவி எடுக்க வேண்டும்.இதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ன்ன வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும்.
பிறகு அரிசி உளுந்து இரண்டையும் ஊறவைத்து தோசைக்கு மாவு அரைப்பது போல அரைத்து வைக்க வேண்டும். இதன் பின்னர் அரைத்த கீரையின் கலவையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிக்கர் இதை தோசை போட்டு சாப்பிடலாம் தோசை ஊற்றும் போது நல்லெண்ணை சேர்ப்பது நன்மை தரும்.
இது மற்றைய தோசைகள் போல இல்லை முழுக்க முழுக்க ஆரோக்கியம் நிறைந்தது. இந்த தோசைக்கு தக்காளி சட்னி அல்லது வெங்காய சட்னி அல்லது கார சட்னி சேர்த்து காலை டிஃபனாக சாப்பிடலாம்.
தோல் நோய்களுக்கு, முடக்கத்தான் கீரை மிகச்சிறந்த மூலிகை என்று சொல்லலாம்.. சொறி, சிரங்கு என தோலை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து.
மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் இதை சாப்பிட்டால் அதற்கு சிறந்த நிவாரணமாக இருக்கும். இந்த கீரையை அதிகம் சேர்த்து கொண்டால், உடம்பில் வாதத்தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |