டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை இவ்வளவா?
டார்க் சாக்லேட் அனைவராலும் விரும்பப்படும் ஒரு சுவை உணவாகும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் பிற சேர்மங்களால் நிரம்பி இருக்கிறது. டார்க் சாக்லேடானது இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்களின் நல்ல மூலமாகும்.
ஆக்ஸிஜன் போக்குவரத்து, தசை செயல்பாடு மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்ற பல்வேறு உடலியல் செயல்பாடுகளில் இந்த தாதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனை சாப்பிடுவதால் உடலில் பல நன்மைகளை இது தருகின்றது. அது என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் ததெளிவாக பார்க்கலாம்.
டார்க் சாக்லேட்
தற்போது செய்த ஆராய்ச்சியின்படி டார்க் காக்லேட் சாப்பிட்டால் அது நமது சருமத்தை மென்மையாக்கி தோலை மிருதுவாக வைத்திருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இது சூரிய ஒளியால் நமது சருமம் சிதைவடைவதை பாதுகாக்கிறது. எப்போதும் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது. நமது சருமத்தில் சூழல் அழுக்கினால் ஏற்படும் கரும்புள்ளி போன்ற முகத்தின் பிரச்சனைகளுக்கு இந்த டார்க் சாக்லேட் சிறந்த ஒரு சிகிச்சை நிவாரணியாக தென்படுகிறது.
இந்த உணவில் காணப்படும் தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற டார்க் சாக்லேட்டில் காணப்படும் அத்தியாவசிய தாதுக்கள் செல் வளர்ச்சியை ஊக்குவிக்து இளமையாக வைத்திருக்கிறது.
நம் எல்லோரது சருமத்திலும் இருக்கும் பாதுகாப்பு கவசத்தை இது மேம்படுத்துகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மிருதுவான சருமத்தை வெளிப்படுத்துவதோடு, சரும வடுக்கள் மற்றும் தழும்புகளையும் ஒளிரச் செய்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மிகவும் அதிகமான வயிற்று வலியை அனுபவிக்கும் பெண்கள் இதை சாப்பிட்டால் மன அழுத்தம் வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தால் அது நமது சருமத்தை பொலிவிழக்க செய்து காட்டும். இதற்கு டார்க் சாக்லேட்டில் ஏராளமான மெக்னீசியம் இருப்பதால், இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இது கொலாஜன் முறிவைத் தடுக்கிறது, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இதிலிருக்கும் தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் செல் வளர்ச்சியை மேம்படுத்தி தோல் மற்றும் நமது உச்சந்தலை பகுதியில் நல்ல ஒரு மாற்றத்தை தருகிறது.
இதை தவிர அவற்றை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து தொற்றுக்கள் வராமலும் நாள்பட்ட நோயை தடுக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள கொழுப்புகளில் ஒலிக் அமிலம்இதய ஆரோக்கியத்திற்கான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பைக் கொண்டிருக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
இதில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதனால் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |