அதிகமா டென்ஷன் ஆகுறீங்களா? அப்போ இதையெல்லாம் உடனே நிறுத்துங்க
உயர் இரத்த அழுத்தம். பொதுவாக ஹைப்பர் டென்ஷன் என அழைக்கப்படுகின்றது.
தற்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சினையாக இருந்தாலும் இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாகதாக இருக்கின்றது.
ஹைப்பர் டென்ஷன் நிலையானது இதய நோய், பக்கவாதம் போன்ற உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதக விளைவுகளை தோற்றுவிக்கும்.
ஒருவர் தனது நிலையை கவனத்தில் கொண்டு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுமுறை
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதிக சோடியம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை செறிவு கொண்ட உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி
தினசரி முறையான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். மேலும் வாரத்திற்கு 2 முறையாவது தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இது ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை வலுவாக குறைக்கின்றது.
ஆரோக்கியமான எடை
எப்போதும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டியது அவசியம். அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்ப அவரின் எடை இருப்பதே ஆரோக்கியமானது. கூடுதல் பருமனாக இருப்பது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை தோற்றுவிக்கின்றது. எனவே இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
அளவாக மது அருந்துங்கள்
தற்காலத்தில் பொதுவாக பெரும்பாலானவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருக்கின்றது. மது பழக்கம் கொண்டவர்கள் எப்போதும் மிதமான அளவில் அதனை பருகும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்
புகைப்பிடிப்பதால் ரத்த நாளங்கள் சேதமாகின்றது. அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிகோடின் எனும் வேதிப்பொருள் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகப்படுத்துகின்றது. தொடர்ச்சியாக புகைப்பிடிப்பது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது.
மனஅழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்
தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு, முறையற்ற உணவுப்பழக்கம், அதிகமாக காபி குடிப்பது போன்ற பல விடயங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இதனை தவிர்க்க முறையான தியானம் அல்லது யோகா பயிற்சி போன்றவற்றில் ஈடுப்பட வேண்டும்.
போதுமான அளவு தூக்கம்
தினமும் இரவு 7-9 மணிநேரம் முறையான தூக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 8 மணிநேரத்துக்கு குறைவாக தூங்குவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |