Gooseberry Pickle: ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்: எப்படி செய்வது?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய நெல்லிக்காயில் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.
நெல்லிக்காயில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தினசரி நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதுடன் உடல் எடையைக் குறைக்க உதவும்.
நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
அதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் காரணமாக இது தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். மொத்தத்தில் நெல்லிக்காய், உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சூப்பர்ஃபுட் ஆகும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த நெல்லிக்காயில் நாவூரும் சுவையில் எளிமையான முறையில் எவ்வாறு ஊறுகாய் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 1/2 கிலோ
பூண்டு - 15 பல்
மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
பெருங்காய தூள் - 1/2 மேசைக்கரண்டி
வினிகர் - 1 1/2 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கடுகு எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி சூடானதும், நெல்லிக்காய்களை போட்டு மிதிகமான தீயில் நன்றான வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் நன்றாக வதங்கியவுடன் அதனை தனியான ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்துக் வதக்கி, நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதனையடுத்து மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் பெருங்காய பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வதக்கி வைத்துள்ள நெல்லிக்காயையும் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
நெல்லிக்காய் நன்றாக மசாலாக்களுடன் சேர்ந்து வதங்கியவுடன் அடுப்பை அணைத்து ஊறுகாயை ஆறவிட்டு,ஒரு ஜாரில் போட்டு வைத்தால், ஒரு மாதம் வரையில் வைத்திருந்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |