சாணக்கிய நீதி: இந்த 5 விடங்கள் தெரிந்தால் எதிரியையும் உங்க ரசிகனா மாத்திடலாம்!
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
அவரின் கொள்கைகளை தொகுத்து உருவாக்கப்பட்ட சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை.
இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்தது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் குறிப்பிட்ட சில பழக்கங்களை கொண்டிருப்பது பலம் மிக்க எதிரிகளையும் எளிமையான தோற்கடிக்க துணைப்புரியும் என குறிப்பிடப்படுகின்றது. அப்படிப்பட்ட பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிரிகளை வீழ்த்தும் அரிய குணங்கள்
சாணக்கி நீதியின் பிரகாரம் நம்மை சுற்றியிருக்கும் எதிரிகளை வீழ்த்த வேண்டுதம் என்றால், அவர்களின் பலத்தில் அடிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களின் பலவீனத்தை புரிந்துக்கொண்டால், எளிமையான வெற்றிக்கொள்ள முடியும் என்கின்றார்.
எதிரியின் மனதைப் புரிந்துகொள்ளும் குணம் இருந்தால் எதிரியையும் உங்களுடைய ரசிகர் கூட்டத்தில் எளிமையாக சேர்த்துவிடலாம். இது முதலில் தோல்வியயை போல் தோன்றினாலும் இதுவே உண்மையான வெற்றி என்பதை சாதித்த பின்னர் உணர்வீர்கள்.
சாணக்கியரின் கருத்துப்படி எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால், ஒருபோதும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. வாக்குவாதம் நிச்சயம் பகை உணர்வை தூண்டும்.
கலந்துரையாடரல் வேறு வாக்குவாதம் வேறு என்பதற்கான வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் வாழ்வில் எதிரிகளே இருக்க முடியாது என்கின்றார் சாணக்கியர்.
அதற்கு பதிலாக பொறுமையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் எதிரியாக இருந்தாலும் கூட, அவர்களிடம் விஷயங்களை மிகவும் தெளிவாக புரிய வைப்பது பகை உணர்வை அந்த இடத்திலேயே வேரறுக்க துணைப்புரியும்.
சாணக்கியரின் கருத்துப்படி எதிரியுடன் பரஸ்பர புரிதலை உருவாக்க முன்முயற்சி எடுப்பது எதிரியை பலவீனப்படுத்த சிறந்த உத்தியாகும். அதன் மூலம் அவர்களின் அடுத்தகட்ட நகர்வுகளை அறிந்துக்கொண்டு பிரச்சினைகளையும் முறன்பாடுகளையும் தவிர்க்கலாம்.
கோபத்திலோ அல்லது விரக்தியிலோ வார்த்தைகளை தவறாக பயன்படுத்திவிடாதீர்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
வார்த்தைகளால் ஒரு எதிரியை நண்பனாக மாற்றலாம் அதே நேரம் நண்பனை எதிரியாகவும் மாற்றலாம். எனவே வார்த்தைகளில் பக்குவத்தை வளர்த்துக்கொள்வது முகவும் முக்கியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |