1கப் பாசி பயறு, இரண்டு உருளைக்கிழங்கு - நாவூற கடப்பா சாம்பார் செய்யலாம்
வீட்டில் பாசிபயறும் உருளைக்கிழங்கும் இருந்தால் ஒருமுறை கடப்பா சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க.
திரும்ப திரும்ப செய்ய தூண்டும். கடப்பா சாம்பார் என்பது தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் மிகவும் பிரபலமான, இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு சட்னி, சாம்பாருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு கறியாகும்.
பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை முதன்மையாகக் கொண்டு, மசாலாவுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இதன் சுவை, மற்ற சாம்பார்களை விட மாறுபட்டு, மிகவும் சுவையாக இருக்கும். இதை செய்யும் முறை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- சின்ன வெங்காயம்- 20
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- தக்காளி- 2
- பச்சை மிளகாய்- 3
- பூண்டு- 3 பல்
- உருளைக் கிழங்கு- 3
- பாசிப் பருப்பு- கால் கிண்ணம்
- உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய்- தேவையான அளவு
தாளிக்க
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை- சிறிதளவு
அரைக்க
- தேங்காய்- கால் மூடி (துருவியது)
- கசகசா- 2 தேக்கரண்டி
- சோம்பு- 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் கடப்பா சாம்பார் செய்ய பாசிப் பருப்பை நிறம் மாறாமல் வறுத்து, வேகவைக்கவும், அதே போல உருளைக்கிழங்கையும் வேகவைக்கவும்.
பின்னர், இது இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதை செய்து விட்டு கொஞ்ச நேரம் கசகசாவைச் சிறிதுநேரம் ஊறவையுங்கள்.
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்த பருப்பு, மசித்த உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
கடைசியாக உப்பு, மல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான கடப்பா சாம்பார் தயார். இந்த சாம்பாரை இட்லியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |