மூக்கில் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெய் விடுங்க- இந்த நோய்கள் வராது
உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு தினமும் மூக்கில் பாதாம் எண்ணெய் ஊற்றினால் நன்மை கிடைக்கும் எனப்படுகின்றது.
பாதாம் எண்ணெய்
பாதாம் மிகவும் ஆரோக்கிய நன்மை தரும் ஒரு விதையாகும். பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது, எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்துகிறது.
சரும ஆரோக்கியத்திற்கும் இது நன்மை தரும். இதிலும் சிலர் பாதாம் பருப்பை ஓறவைத்து சாப்பிடுவார்கள் சிலர் அப்படியே சாப்பிடுவார்கள்.
இது ஒவ்வொருவரின் சுவையை பொறுத்தது. இந்த நிலையில் பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் 2 சொட்டு மூக்கில் ஊற்றினால் பல நன்மைகள் கிடைக்கும்.
பாதாம் எண்ணெயில் பல நன்மைகள் உள்ளது. பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள் A, E மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், சுருக்கங்களைத் தடுப்பதற்கும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
பாதாம் எண்ணெய்யை மூக்கில் விடுவதன் நன்மைகள்
- அடிக்கடி வேலைப்பளு மற்றும் வேறு காரணத்தால் வரும் தலைவலியிலிருந்து நிவாரணம் தரும்.
- அசாதாரணமான முடி உதிர்வை தடுக்கும்.
- சைனஸ் பிரச்சனைகளில் நிவாரணம் தரும்.
- பற்களை மற்றும் ஈறுகளை பலப்படுத்துகிறது.
- கண்களின் துல்லியமான பார்வைக்கு துணையாக இருக்கும்.
- முகப் பளபளப்பை அதிகரிக்கிறது.
- ஞாபக மறதியை இல்லாமல் செய்யும்.
- முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்கிறது.
இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்காமல் மூக்கில் தினமும் உங்களுக்கு உகந்த நேரத்தில் பாதாம் எண்ணெய் ஊற்றினால் பல ந்னமைகள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |