ஜலதோஷத்தில் அவதியா ? நாக்கிற்கு இதமான ஆரோக்கியமான எலுமிச்சை ரசம்
ரசம் ஒரு பிரபலமான ஆரோக்கியமான உணவாகும். பொதுவாக சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்களுக்கு இந்த ரசம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது.நாம் அனைவரும் விரும்பும் ஒரு உணவாக இருக்கும் ரசம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை தருகிறது.
ரசம் பல்வேறு வகையான நாம் செய்யலாம்.அந்த வகையில் தக்காளி ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம் என ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்வர். இதில் எலுமிச்சை ரசம் ஆரோக்கியமான மற்றும் சுவையான ரெசிபி ஆகும்.
இது ஜலதோஷத்திற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இந்த ரசத்தை சூடான சாதம் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இந்த சுவையான எலுமிச்சை ரசம் செய்முறையை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொடியாக நறுக்கிய தக்காளி – 1
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
- உப்பு மற்றும் சர்க்கரை - தேவையான அளவு
- எலுமிச்சை - 1
- நெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 1
செய்யும் முறை
ரசத்தில் வெறும் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக பருப்பு வேக வைத்த தண்ணீரை சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். ஒரு பாத்திரத்தில் சுமார் 1/2 கப் தண்ணீரை சூடாக்கவும். அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, இரண்டாக வெட்டிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கவும் . அதில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து, பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி மிருதுவாக மாறும் வரை சமைக்கவும். இதில் , மஞ்சள் தூள், உப்பு, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். இதை நன்கு கலந்து ஒரு கொதி வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும். இறுதியாக தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் மேலே கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவையாக இருக்கும்.
இந்த ரசம் காய்சலில் இருப்பவர்களுக்கு எந்த உணவிலும் சுவை தெரியாது. அவர்களுக்கு இந்த ரசம் செய்து கொடுக்கும் போது உடலில் பல நன்மைகள் கிடைப்பதுடன் உணவு உண்ணவும் ஆவைப்படுவார்கள். எனவே இதை ஜலதோஷத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்தால் நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |