bombay puri masala: பூரிக்கு ஒருமுறை இப்படி மசாலா செய்து பாருங்க
பூரிக்கு அருமையான மசாலா மற்றும் அவசர சட்னி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சப்பாத்தி, பூரிக்கு குருமா அல்லது மசால் வைத்து சாப்பிடுவதற்கு தான் அனைவரும் விரும்புவார்கள். குறித்த மசாலாவையே சற்று வித்தியாசமாக செய்தால் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் சாப்பிடுவார்கள்.
தற்போது பாம்பே பூரி மசாலா மற்றும் அவசர சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
கஸ்தூரி மேத்தி - ½ ஸ்பூன்
மிளகாய் தூள் - ½ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
மல்லி தூள் - ¼ ஸ்பூன்
கரம் மசாலா - ¼ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
குக்கர் ஒன்றில் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்களை தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் பாத்திரம் ஒன்றினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதனுடன் மிளகாய், மல்லி, கரம் மசாலா ஆசிய தூள்களை சேர்க்கவும்.
மசித்த உருளைக்கிழங்களை சேர்த்து கிளற வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்த பின்பு கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான பூரி மசால் தயார்.
image: yummyoyummy
அவசர சட்னிக்கு தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
வரமிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்ப)
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தாளிக்க
உளுந்தம் பருப்பு - தாளிக்க
கடலைப்பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பூண்டு, மற்றும் வரமிளகாயுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும்.
பின், அதில் சட்டினியை சேர்த்து லேசாக கொதிக்க வைத்தால், சுவையான அவசர சட்னி ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |