2 முட்டை, 4 பிரெட் இருந்தால் போதும்... சத்தான முட்டை மசாலா டோஸ்ட் தயார்
ஆரோக்கியமான காலை உணவு முட்டை மசால் டோஸ்ட் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை உணவு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமாகும். இரவு முழுவதும் பட்டினியாக இருக்கும் குடலுக்கு காலையில் கொடுக்கும் முதல் உணவு ஆரோக்கியமாக இருப்பது அவசியம் ஆகும்.
மேலும் புரதச்சத்து என்பது காலை உணவில் மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் வெறும் 2 முட்டையை வைத்து சத்தான காலை உணவு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளது
பிரெட் - 4
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பாத்திரம் ஒன்றில் முட்டையினை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், சில்லி ஃபிளேக்ஸ் மற்றும் கொத்த மல்லி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிரெட்டை எடுத்து அதன் ஒரு புறத்தில் முட்டை கலவையை ஊற்றி அனைத்து இடங்களுக்கும் தடவி விடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதின் சிறிதளது வெண்ணெய் சேர்க்கவும்.

பிரெட்டில் முட்டை கலவையை தடவி வைத்திருக்கும் பகுதியை வெண்ணெய்யில் வேக வைக்குமாறு தோசைகல்லி போட வேண்டும்.
பின்பு மற்றொரு புறம் பிரெட்டினை திருப்பி போட்டு, அதிலும் முட்டை கலவையை சேர்த்து மீண்டும் வெண்ணெய்யில் வேக வைக்கவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததுவுடன், சாப்பிடலாம். அவ்வளவு தான் சத்தான காலை உணவு முட்டை மசாலா டோஸ்ட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |