எப்போது எடையை பார்க்க வேண்டும்? இந்த நேரத்தில் பார்த்தால் மட்டும் போதுமாம்
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பெண்கள் என அணைவருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் உடல் எடை அதிகரிப்பு பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது.
மேலும் உடல் எடையை அதிகரிக்கும் போது அதனை எவ்வாறு செக் பண்ணுவது தொடர்பில் சில நுட்பங்கள் இருக்கின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் உடல் எடையை எவ்வாறு கணிப்பது என்பது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
எடை அதிகமாக இருப்பவர்கள் தங்களின் எடை பற்றி அவ்வப்போது தெரிந்துகொள்ள வீட்டிலேயே எடை மிஷின் வாங்கி வைத்து கொள்ளலாம் என நினைப்பார்கள். இவ்வாறு செய்வதால் உங்களின் மன அழுத்தம் அதிகமாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எடையை எப்போது செக் செய்ய வேண்டும்?
மெஷினில் செக் பண்ணுவதால் அது தற்போது நீங்கள் இருக்கும் எடையை குறைத்து அல்லது கூட்டி காட்டும்.
இதனை மருத்துவர் ஒருவர் கூறும் போது,“ எடையை பார்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் காலை நேரங்களில் செய்ய வேண்டும். ஏனெனின் இரவு சாப்பிட்ட சாப்பாடுகள் அனைத்தும் காலையில் சமிபாடு அடைந்திருக்கும் காலையில் எழுந்தவுடன் மலம் கழித்து விட்டு எடை மெஷினில் எடையை பார்க்கும் போது துல்லியமான எடை கிடைக்கும்.
இதனை தொடர்ந்து காலை தவிர்த்து மற்ற நேரங்களில் எடையை பார்க்கும் போது 500 கிராம் முதல் 1 கிலோ வரையிலான மாறுபாடு இருக்கலாம். காரணம் வயிற்றில் சமிபாடு அடையாத உணவுகள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.