நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி! 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்..

Cold Fever Healthy Food Recipes
By DHUSHI Feb 03, 2023 03:33 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக வீடுகளிலிருக்கும் குழந்தைகளுக்கு கடினமான சாப்பாடுகள் கொடுத்தால் எடுத்துக் கொள்ள மாட்டார், காரணம் என்ன தெரியுமா?

அவர்களுக்கு அதனை மென்று சாப்பிடும் அளவிற்கு பொறுமை இருக்காது, அத்துடன் அதனை மென்று சாப்பிட தெரியமாலும் இருக்கலாம்.

இதனால் குழந்தைகள் ரொட்டி, பாண், சப்பாத்தி இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது குறைவாக இருக்கும். இவர்களுக்கு கஞ்சி, சூப், நூடில்ஸ் போன்ற இலகுவாக சாப்பிடும் அளவிற்கு உணவுகளை கொடுப்பார்கள்.

மேலும் நாம் ஏதாவது ஒரு நோயில் சிக்கிக் கொண்டிருக்கும் போது நமக்குமே மென்று சாப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் நாமும் இது போன்று உணவுகள் எடுத்துக் கொள்ள விரும்புவோம்.

அத்துடன் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானகவும், மற்றும் மென்மையாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு எனின் அது போல் என்ன உணவு இருக்கிறது என்றா யோசிக்கீறிர்கள்.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி! 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.. | Oats Veg Porridge Oats Veg Kanji

ஆம், நாம் சத்தான, மென்மையான உணவு என்றால் சிக்கிரம் ஞாபகத்திற்கு வருவது கஞ்சி தான். இது ஒரு ஆரோக்கியம் நிறைந்ததும் இலகுவில் சமிபாடு அடையக்கூடிய உணவாகவும் காணப்படுகிறது.

அந்தவகையில் வீட்டிலுள்ள காய்கறிகளை வைத்து எவ்வாறு ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையானபொருட்கள்

ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி

கேரட் - சிறியது 1

பீன்ஸ் - 2

முட்டை கோஸ் - 25 கிராம்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 1(தேவைப்பட்டால்)

வெஜ் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்)

மிளகு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி! 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.. | Oats Veg Porridge Oats Veg Kanji

எப்படி செய்யலாம் தெரியுமா?

முதலில் கஞ்சிக்கு தேவையான கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், இஞ்சி, ப.மிளகாய் என்பவற்றை நன்றாக கழுவி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு 2 கப் தண்ணீர் ஊற்றி, அதனுள் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் ஸ்டாக் பவுடர், உப்பு என்வற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் பார்க்கும் போதே தெரியும் நன்றாக கொதிக்கும் நிலை, அதில் நறுக்கிய காய்கறிகள் அதாவது கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் என்பவற்றை சேர்த்து சுமார் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் காய்கறிகள் வெந்து விட்டதா? என பார்த்து விட்டு கொதித்திருந்தால் அதில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் ஆவலுடன் காத்திருந்த ஆரோக்கியமான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி தயார்.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி! 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.. | Oats Veg Porridge Oats Veg Kanji

முக்கிய குறிப்பு

சுவைக்காக பரிமாறும் போது எலுமிச்சைச்சாறு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு என்றால் மிளகுத்தூள் அவசியம் இல்லை.

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US