முள்ளங்கி கீரையில் இருக்கும் நன்மைகள் என்னனு தெரியுமா?
உடலின் அனைத்து விதமான பிரச்சனைகளும் அதாவது மூல வலி, முதுகு வலி, மாதவிடாய் வலி போன்ற பிச்சனைகளுக்கு தீர்வாக முள்ளங்கி கீரை அமைகிறது.
முள்ளங்கி
முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. முள்ளங்கியை உணவில் சேர்த்து கொள்வதால் மூட்டுவலி, மூட்டு எலும்புகளில் ஏற்படும் தொற்றுக்களையும் இதன் இலைகள் சரிசெய்துவிடும்.
எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் இந்த இலைகள் குறைத்துவிடும். உள்ளுறுப்புகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
குறிப்பாக பெண்கள் அனைவருமே இந்த இலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இது சிறுநீரகத்தில் தொற்றுக்கள் பாதிக்காத வகையில் செயல்படுகின்றன.
இதை தவிர சக்கரை நோயாளிகள் இந்த முள்ளங்கி கீரையை சாறு எடுத்து வெந்தயம் போட்டு ஊற வைத்து சாப்பிடலாம்.
இந்த இலையிலிருந்து 6 ஸ்பூன் அளவுக்கு சாறு எடுத்து குடிக்கும்போது, சிறுநீரக கற்களும் கரைந்துவிடும் என்று கூறப்படுகின்றது.
இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள், மூலத்தால் ஏற்படும் வீக்கத்தையும், தொற்றையும் குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறதாம்.
எனவே, முள்ளங்கி இலையில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, ஆசன வாய் பகுதியில் தடவிவரும்போது, மூலநோய் தீவிரம் குறையுமாம்.