ஆளிவிதை இரவு நீரில் ஊற வைத்து காலையில் குடிச்சா என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கோங்க!!
பொதுவாக காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருப்பதற்காக காபி, டீ எடுத்து கொள்வது வழமை.
ஆனால் இது போன்ற பானங்கள் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சினைகள் ஏற்படுத்துக்கின்றது.
இவற்றிற்கு பதிலாக உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் இயற்கை பானங்களை குடிப்பதே நல்லது.
அந்த வகையில் காலையில் டீயிற்கு பதிலாக ஆளிவிதை இரவில் உற வைத்து சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
ஆளிவிதைகளில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, நார்ச்சத்து, புரோட்டீன், தயமின், காப்பர், மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ் செலினியம், ஜிங்க், வைட்டமின் பி6, இரும்புச்சத்து, ஃபேலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பெரூலிக் அமிலம், மாலிப்தீனம் மற்றும் பல சத்துக்கள் உள்ளன.
இதன்படி, ஆளிவிதைகளால் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆளிவிதைகளினால் ஏற்படும் நன்மைகள்
1. செரிமான பிரச்சினையுள்ளவர்கள் காலையில் தேநீருக்கு பதிலாக ஆளிவிதை ஊற வைத்த நீரைக் குடிக்கலாம். இது மலச்சிக்கலை சரிச் செய்து வயிற்றுப்போக்கிற்கு நிரந்தர நிவாரணம் தருக்கின்றது.
2. தலைமுடி உதிர்வு பிரச்சினையுள்ளவர்கள் ஆளிவிதைகளை எடுத்து கொள்ளலாம். ஏனெனின் ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துக்கின்றது.
3. ஆளிவிதைகளை காலையில் குடிக்கும் பொழுது, சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் முகப்பருவை உண்டாக்கும் ஆன்ட்ரோஜென் ஹார்மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சரும பிரச்சினைகள் குறையும்.
4. சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை குடிக்கலாம் என்றால், தாராளமாக குடிக்கலாம். இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரித்து, சர்க்கரை நோயாளர்களை பாதுக்காக்கின்றது.
5. அதிகமான கொலஸ்ட்ரால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் டீற்கு பதிலாக இந்த ஆளிவிதைகள் கலந்த நீரை எடுத்து கொள்ளலாம். அத்துடன் ஆளிவிதை நீரில் டயட்டரி நார்ச்சத்து, ஏராளமாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |