ஒரே நாளில் மூட்டுவலியை விரட்டியடிக்கும் இயற்கை பானம்... ஆங்கில மருந்தே இனி தேவையில்லை!
முன்பு எல்லாம் முதுமையில் வரும் மூட்டு வலி தற்போது 30 வயதை கடந்ததுமே வந்து விடுகின்றது.
இது வந்தாலே நம்மை எந்த வேலையை செய்யவிடமால் முடக்கிவிடுகின்றது.
முழங்கால் மூட்டுக்கள் தேய்மானம் அடைய ஆரம்பித்து கடுமையான முழங்கால் மூட்டு வலியை உண்டாக்கி விடுகின்றது.
இதில் இருந்து எளிதில் விடுபட நாம் மருந்துகளை குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை பானங்கள் போதும். தற்போது அதனை எப்படி தயாரிப்து என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- அன்னாசி துண்டுகள் – 2 கப்
- தேன் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
- ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
- ஓட்ஸ் – 1 கப்
- பாதாம் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
- பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
செய்முறை
முதலில் ஓட்ஸை எப்போதும் போன்று சாதாரணமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது சுடுநீரை ஊற்றி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதில் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் பாதாமை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் ஆரஞ்சு ஜூஸ், தேன், தண்ணீர் மற்றும் பட்டைத் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஓட்ஸை சேர்த்து சில நிமிடங்கள் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பானத்தை தினமும் குடித்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்.
இந்த பானத்தை ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், 15 நாட்களில் இதுவரை மூட்டுக்களில் சந்தித்து வந்த வலி முற்றிலும் நீங்கி, இனிமேல் முழங்கால் மூட்டு வலி வராமல் தடுக்கப்படும்.