ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மொறு மொறுப்பான முந்திரி- பாதாம் ஊறுகாய்
பொதுவாகவே உணவின் சுவையை அட்டகாசமாக மாற்றுவதில் ஊறுகாய் வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றது. ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் சுமாரான உணவு கூட சூப்பராக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
பெரும்பாலும் மாங்காய், எலுமிச்சை, பூண்டு, நெல்லிக்காய், நாரதங்காய், மாவடு, ஏன் அன்னாசியில் கூட ஊறுகாய் சாப்பிட்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கும் முந்திரி-பாதாம் ஊறுகாய் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
மொறுமொறுப்புடன் மசாலாக்களின் காரமும் கலந்து ஆரோக்கிய பலன்களையும் அள்ளிக்கொடுக்கும். முந்திரி-பாதாம் ஊறுகாய் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முந்திரி - 100 கிராம் (லேசாக வறுத்தது)
பாதாம் - 100 கிராம் (லேசாக வறுத்தது)
கடுகு எண்ணெய் - 1/2 கப்
கடுகு- 1 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
வெந்தய விதை - 1 தே.கரண்டி
கலோஞ்சி (கருஞ்சீரகம்) - 1 தே.கரண்டி
பெருங்காயம் - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வினிகர் - 2 தே.கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை லேசாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி சூடாகியதும்,அதில் பெருங்காயம், கடுகு, வெந்தயம், பெருஞ்சீரகம் மற்றும் கலோஞ்சி (கருஞ்சீரகம்) விதைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அவை வெடிக்க ஆரம்பித்ததும், அதனுடன் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் முந்திரி பாதாமைச் சேர்த்து மசாலாக்களுடன் நன்றாக கலந்துவிட வேண்டும்.
அதன் பின்பு ஊறுகாய் நீண்ட காலம் கெடாமல் இருக்கவும் லேசான காரமான சுவையை பராமரிக்கவும் அதனுடன் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முந்திரி-பாதாம் ஊறுகாய் தயார்.
இதனைஆற விட்டு, பின்னர் அதை ஒரு சுத்தமான, உலர்ந்த கண்ணாடி ஜாரில் போட்டு வைத்து பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
