மொறு மொறு சுவையில் முட்டை கோஸ் வடை ... எளிமையாக எப்படி செய்வது?
பொதுவாகவே சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் வந்துவிட்மால், தேனீர் குடிப்பதற்கு சிறுவர்கள் நொறுக்குத் தீனி கேட்பது வழக்கம்.
இவ்வாறான நேரங்களில் கடைகளில் துரித உணவுகளை வாங்கிக்கொடுப்பது அவரை்களை உடல் ஆரோக்கியத்தை வலுவாக பாதிக்கும்.
அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமாகவும், சுகாதாரமான முறையிலும் எப்படி முட்டை கோஸ் வடை செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
கடலைப்பருப்பு -முக்கால் கப்
உளுந்தம்பருப்பு -கால் கப்
துவரம் பருப்பு -கால் கப்
முட்டைக்கோஸ் -2 கப் பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய்- 2 நறுக்கியது
நறுக்கிய கொத்தமல்லி -சிறிதளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
சீரகம் -1தே.கரண்டி
பெருங்காயம் -1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரையில் நன்கு ஊறவிட வேண்டும். பின்னரை் தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பருப்பை போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன் 2 கப் முட்டைக்கோஸ், 2 நறுக்கிய மிளகாய், 2 ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, 1 ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கியதும்,மாவை வடையாகத் தட்டி எண்ணெயில் போட வேண்டும்.
வடை நன்கு பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவு தான் மொறு மொறுப்பான முட்டைக்கோஸ் வடை சுகாதாரமான முறையில் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |